Sunday, April 7, 2013

மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய USB Drive அறிமுகம்

தரவு, தகவல்களை இலகுவாக பரிமாற்றுவதற்கு பயன்படும் USB Drive ஆனது பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களினால் ஆக்கப்பட்டிருக்கும்.
எனவே பழுதடைந்து USB Drive - களை வீசும்போது இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் சில உலோகங்கள் சூழலுக்கு தீமை பயக்குவதாக காணப்படுகின்றன.
இதன் காரணமாக தற்போத மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய GIGS.2.GO எனப்படும் USB Drive ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேப்பரின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த USB Drive - கள் 1 GB வரையான தகவல்களை சேமிக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இதற்கு முன்னரும் இவ்வாறு மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பேப்பரினாலான USB Drive அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றில் 8 தொடக்கம் 32 MB வரையான தகவல்களை மட்டுமே சேமிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment