Thursday, April 4, 2013

ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி



இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு புத்தம் புதிய வசதிகளை வழங்கி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது Google Drawing எனும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது Document, Presentation, Website போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய காவிகளை (Vector) அடிப்படையாகக் கொண்ட உருவங்கள், Chart மற்றும் Diagrams போன்றவற்றினை வரைவதற்காக வசதியை தரும் அப்பிளிக்கேஷன் நீட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Google Drive உடன் இணைக்கபப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் ஆனது வரையப்படும் உருவங்களை இயல்பாகவே சேமித்து வைக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன் மீண்டும் அவற்றினை எந்தவொரு கணனி சாதனத்திலிருந்தும் பயன்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது.

மேலும் குரோம் உலாவிகளில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு உருவாகக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் பல் பயனர்(Multiple User) இடைமுகத்தினை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

https://chrome.google.com/webstore/detail/google-drawings/mkaakpdehdafacodkgkpghoibnmamcme

No comments:

Post a Comment