Tuesday, June 4, 2013

விண்டோஸ் 8 - தேவைப்படும் சில புரோகிராம்கள்



உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடுதிரையுடன் அல்லது வழக்கமான மானிட்டருடன் பயன் படுத்துகிறீர்களா? 

அப்படியானால், இதில் கீழே தரப்பட்டுள்ள சில புரோகிராம்கள் கட்டாயமாகத் தேவைப்படும். இவை அனைத்தும் இலவசமே. எனவே, இவற்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்திப் பார்க்கவும். தேவையே இல்லை என, பயன்படுத்திப் பார்த்த பின்னும் உணர்ந்தால், நீக்கிவிடலாம். ஆனால், அப்படி நீக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இதோ அந்த புரோகிராம்கள்.


1. ஸ்கை டிரைவ் (SkyDrive): 

ஸ்கை ட்ரைவினை ஏற்கனவே பயன்படுத்தி வந்திருப்பீர்கள். இவர்கள், விண்டோஸ் 8க்கான பதிப்பினைப் பதிவு செய்து, தங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு புரோகிராமாக வைத்துக் கொள்ளலாம். 

நம் பைல்களைப் பாதுகாப்பாகப் பதிந்து சேமித்து வைக்க நல்லதொரு இடமாக இது இயங்கி வருகிறது. பேக் அப் செயல்பாட்டிற்கு இது நிச்சயமாகத் தேவைப்படும் வசதியாக உள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்திடவும், மேலதிகத் தகவல்களுக்கும் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://apps.microsoft.com/windows/enus/ app/skydrive/2682e31415ab4510bbb3d33da78a44d9


2. விண்டோஸ் 8 சீட் கீஸ் (Windows 8 Cheat Keys):

விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் விதம், இயக்கப்படும் வழிமுறைகள் குறித்த, அத்தியாவசியத் தகவல்களை விரைவாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா! 

வேறு எங்கும் செல்ல வேண்டாம்.http://apps.microsoft.com/windows/enus/app/windows8cheatkeys/24f6299098c74c2695cbcb09267680e8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான முக்கிய இயக்கத் தொகுப்பு கீ அமைப்புகளைத் தரவிறக்கம் செய்து, கற்றுக் கொள்ளவும். கீ போர்ட் ஷார்ட் கட் மட்டுமின்றி, தொடுதல் வழி இயக்க முறைகளையும் இது கற்றுத் தருகிறது. 

அனைத்து புரோகிராம் டைல்ஸ்களையும் மொத்தமாகக் காணும் வழி, டைல்ஸ்களை மாற்றி அமைக்கத் தேவையான வழி முறைகள், புரோகிராம்களை நீக்கும் வழிகள் என அனைத்து வகையான இயக்க முறைமை வழிகளையும் இது தருகிறது. பொதுவான பல இயக்க வழிகளுக்கான கீ தொகுப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. 


3. ஸ்கைப் (Skype): 

பலர் தினந்தோறும், அடிக்கடி ஸ்கைப் புரோகிராமினைத் தங்கள் தனிப்பட்ட நண்பர்களுடன், உறவினர்களுடன் தொடர்பு கொள்ள, ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர். நேரடியான வீடியோ, ஆடியோ மற்றும் உடனுடக்குடனான செய்தி தகவல் பரிமாற்றத்திற்கு இது மிக எளிமையான ஒரு சாதனமாக இருக்கிறது. 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இதனை விண்டோஸ் அக்கவுண்ட்டுடன் இணைத்தே செயல்படுத்த வேண்டும். மானிட்டரின் திரையில் வைத்துப் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது. இதனைத் தரவிறக்கம் செய்வதற்கும், மேலதிகத் தகவல்களுக்கும்http://apps.microsoft.com/windows/enus/app/skype/5e19cc6189944797bdc7c21263f6282b என்ற முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்தினைக் காணவும். 


4. கம்பெனி ஸ்டோர் (Company Store): 

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் புரோகிராம். நம் கம்ப்யூட்டருக்குள்ளாகவே அப்ளிகேஷன் ஸ்டோர் ஒன்றை உருவாக்கி நிர்வகிக்க உதவுகிறது. விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர்.டி., மற்றும் தர்ட் பார்ட்டி விண்டோஸ் 8 அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து வைத்து நிர்வகிக்கலாம். 

உள்ளாகவும், வெளியே பிறவற்றில் பதிந்து வைத்திருக்கக் கூடிய, கிடைக்கக் கூடிய இணைய அப்ளிகேஷன்களையும் இதற்குத் தொடர்பிருக்கும் வகையில் அமைக்கலாம். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த ஸ்டோருக்கு உங்கள் பெயர் அல்லது நிறுவனப் பெயரினைக் கொடுத்து அமைக்கலாம். 

இதனை மைக்ரோசாப்ட் அனுமதிக்கவில்லை. ஆனால், நம் பெயரினை நாமே அமைத்துக் கொள்ளும் வகையில் இந்த புரோகிராம் வசதி தருகிறது. இதனைப் பெற http://apps.microsoft.com/windows/enus/app/windows8companystore/ 9b22e9ba50cc4e0c8aa6c84d351c4ddb என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும் .


5. ட்விட்டர் (Twitter): 

"எனக்கு இந்த அப்ளிகேஷன் எதற்காகத் தேவைப்படுகிறது?' என்ற கேள்வியுடன் இந்த புரோகிராம் நம்மை எதிர்கொள்கிறது. இதனுடைய அழகான, தெளிவான வடிவமைப்பைப் பார்ப்பவர்கள் எவரும், என்னைப் போல, இதனை ஏற்றுக் கொண்டு பயன்படுத்த ஆசைப்படுவார்கள். விண்டோஸ் 8க்கான இந்த அப்ளிகேஷன், வழக்கமாக இல்லாமல் சற்று மாறுதல்களுடன் உள்ளது. 

பல ட்விட்டர் அக்கவுண்ட்களை வைத்துக் கொண்டு நிர்வகிக்க, இது எளிதில் இணக்கமாக இருக்குமா என்பது ஐயமே. ஆனால், தனி நபர் அக்கவுண்ட்களை இதில் இயக்குவது ஒரு நல்ல இனிய அனுபவமாக உள்ளது. பயன்படுத்திப் பாருங்கள்; நிச்சயமாய் விரும்புவீர்கள். இதனைப் பெறhttp://apps.microsoft.com/windows/enus/app/twitter/8289549f9bae4d449a5c63d9c3a79f35 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். 


6. நினைவூட்டர் ஒரு டைல் (Tiles Reminder): 

இப்போது நிறைய நோட் டேக்கிங், காலண்டர், நினைவூட்டல் நோட் பேட் எனப் பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. டைல்ஸ் ரிமைண்டர், இந்த வகையில், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்க, வடிவமைக்கப்பட்ட புரோகிராம். இதனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொண்டால், திரையில் ஒரு டைலாக இது கிடைக்கும். 

இது தனிநபருக்கான குறிப்பேடாக இயங்குகிறது. இதில் எத்தகைய குறிப்பு வேண்டும் என நாமாகவே முடிவு செய்து, எதனை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் இது அமைந்துள்ளது. இதனைப் பெறhttp://apps.microsoft.com/windows/enus/app/tilesreminder/6f03abc270854be09edad4010b8 58e39 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். 


7. அப்ளிகேஷன் கவுண்டர் (App Counter): 

இது அனைவருக்கும் தேவையா? என்பது தெரியவில்லை. இதன் மூலம், விண்டோஸ் ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறித்த, அண்மைக் காலத்திய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். எவை எல்லாம் பலரால் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுகின்றன? 

எவை எல்லாம் அவ்வளவாக விரும்பப்படவில்லை என்ற தகவல்களைப் பெறலாம். எந்தப் பிரிவில் அதிக எண்ணிக்கையில், புரோகிராம்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிந்து கொள்ளலாம். இந்தக் குறிப்பினை எழுதுகையில், கல்விப் பிரிவும் அதனை அடுத்து, பொழுது போக்குப் பிரிவும் இருந்தன. 

இவற்றை அடுத்து கேம்ஸ் மற்றும் டூல்ஸ் இடம் பெற்றுள்ளன. இது பயனுள்ள அப்ளிகேஷனா என்பதனைப் பயன்படுத்துபவர் மட்டுமே முடிவு செய்திட முடியும். ஆனால், விண்டோஸ் ஸ்டோரின் செயல்பாடு குறித்த ரேங்க் கார்ட் போல இதனைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://apps.microsoft.com/windows/enus/app/appcounter/ d8deb335bf0f49e4a0f6724779a83a71

இதே போல இன்னும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பயன்பாட்டினைப் பெருக்கும் வகையில் கிடைக்கின்றன. மேலே காட்டப்பட்டுள்ளவை அனைவருக்கும் பொதுவான பயன்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டவை ஆகும்.

Monday, June 3, 2013

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?

எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள்.
மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும். இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை.
Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்?
Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும்.
Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது?
இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவவேண்டும். Bittorent அல்லது Utorrent இதற்கு பொருத்தமான மென்பொருள். இவற்றில் ஏதாவது ஒன்றை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கவேண்டிய மென்பொருளிற்கான Torrent file ஐ தரவிறக்கவேண்டும்.
இணையத்தில் Torrent தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்வதன் மூலம் தரவிறக்கலாம். அல்லது http://torrentz.eu/ என்ற தளத்திற்கு செல்லுங்கள். இது ஒரு Torrent தேடுபொறியாகும். இதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை ரைப் செய்து தேடுங்கள்.
தேடியதும், நீங்கள் தேடிய மென்பொருள் என்னென்ன வகைகளில் உள்ளது என்று காண்பிக்கும். உதாரணமாக Windows 7 என்று தேடினால் windows 7 இல் உள்ள Business, Home Premium, Ultimate போன்ற version களை காண்பிக்கும்.
அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ததும், அதற்குரிய Torrent இணைப்பு எந்தெந்த தளங்களில் உள்ளது என்று பட்டியல்படுத்தும். விரும்பிய தளம் ஒன்றை கிளிக் செய்து சென்று அதில் உள்ள Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளவேண்டும். இதன் அளவு Kb அளவுள்ள மிகச்சிறிய File ஆக இருக்கும்.
இதை தரவிறக்கிய பின்னர் Open செய்யுங்கள். இப்போது Bittorent மென்பொருளுடன் நீங்கள் தரவிறக்கவேண்டிய மென்பொருள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
1

Sunday, June 2, 2013

கணனியிலுள்ள கோப்புக்களை துல்லியமாக பேக்கப் செய்வதற்கான மென்பொருள்


கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்கு சீரான முறையில் கணனி வன்தட்டிலுள்ள கோப்புக்களை பேக்கப் செய்வது பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது.
இவ்வாறு பேக்கப் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் தரப்பட்ட போதிலும் அதனைவிட வினைத்திறனான முறையில் பேக்கப் செய்யும் மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் AISBackup எனப்படும் மென்பொருளும் சிறந்ததாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட கோப்புறைகள், கோப்புக்கள், வன்தட்டுக்கள், CD, DVD போன்ற அனைத்து வகையான சேமிப்பு சாதனங்களிலும் காணப்படும் தரவுகளை பேக்கப் செய்ய முடியும்.
இது தவிர பேக்கப் செயன்முறையை குறித்த கால இடைவெளியில் சுயமாகவே செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் பேக்கப் செய்யப்பட்ட தரவுகளை கடவுச்சொற்களைக் கொண்டு பாதுகாக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

வெப் மெயில் பயன்பாட்டில் புதிய வசதிகள்



இணைய தளம் மூலமாகவே பல நிறுவனத் தளங்கள், வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல் வசதியைத் தந்து வருகின்றன. 

முதலில் ஹாட் மெயில் இதனைத் தொடங்கி வைத்தது. பின்னர் யாஹூ, ஜிமெயில் என இது தொடர்ந்தது. தற்போது இந்த வகையில் ஜிமெயில் மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இயங்கி வருகிறது. மின் அஞ்சல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளையும் தந்து வருகிறது. 

வெப் மெயில் எனப்படும் இணைய தளத்திலேயே நம் அஞ்சல் பயன்பாட்டினைக் கொள்வது நமக்குப் பல வழிகளில் பயனைத் தருகிறது. இவற்றை எந்த இடத்திலும், எந்த கம்ப்யூட்டர் மூலமாகவும் அணுகலாம். 

தற்போது கம்ப்யூட்டர் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு இதற்குக் கட்டாயமாக வேண்டும். ஆனால், இது மட்டுமின்றி, இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த வெப் மெயில் தளங்கள் கொண்டுள்ளன. இவை குறித்து இங்குகாணலாம். 

நீங்கள் எந்த வெப் மெயில் பயன்படுத்துபவராக இருந்தாலும் இந்த வசதிகள் தரப்படுகின்றன. இவற்றை நீங்கள் உங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம். 


1. வெப் மெயிலை இணைய இணைப்பின்றி பயன்படுத்துக: 

வெப் மெயிலை நாம் பெற, அது தரும் தளத்தினை இணையம் மூலமாகவே தான் அணுக முடியும். ஆனால், இப்போது, சில மாற்றங்கள் செய்து, இணைய இணைப்பு இல்லாத போதும் அணுகலாம். 

அது எப்படி சாத்தியமாகிறது என்பதனைக் காணலாம். ஜிமெயில் பயனாளர்கள், இதுவரை கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தால், இந்த வசதியினைப் பெற குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும். இதுவும் இலவசமே. 

பின், இந்த பிரவுசர் மூலம், குரோம் வெப் ஸ்டோரை அணுக வேண்டும். இங்கு ஆப்லைன் கூகுள் மெயில் அப்ளிகேஷன் (Offline Google Mail app) என்னும் புரோகிராமினைப் பெற வேண்டும். இதற்கு இந்த ஸ்டோர் தளத்தில் Add to Chrome என்னும் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். 

தொடர்ந்து, நீல நிறத்தில் Offline Google Mail என்னும் பட்டன் Chrome’s Apps என்பதன் கீழ் அமைக்கப்படும். (பிரவுசரில் புதிய டேப் ஒன்றினைத் திறந்து, கீழாக உள்ள Apps லிங்க்கில் கிளிக் செய்திடவும்.)

இந்த ஐகானில் கிளிக் செய்து ‘Allow offline mail’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Continue என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் ஆன்லைன் ஜிமெயில் இன்பாக்ஸின் ஒரு காப்பி உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தப்படும். 

நீங்கள் மின் அஞ்சல் செய்தி ஒன்று அனுப்ப வேண்டும் எனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதும் "அனுப்பலாம்'. நீங்கள் "அனுப்பிய' செய்திகள், இன்டர்நெட் இணைப்பு பெற்றவுடன் அனுப்பப்படும். இந்த Offline Google Mail ஏற்பாட்டினை உங்கள் சொந்த பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே ஏற்படுத்தவும். வேறு கம்ப்யூட்டர் எனில் மற்றவர்கள் உங்கள் செய்திகளைக் காண நேரிடும். 

விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் மற்றும் யாஹூ மெயில் ஆகியவற்றிற்கும் இதே போன்று இமெயில் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திடலாம். 


2. புதிய சோதனை முயற்சிகள்: 

ஜிமெயில் செயல்பாட்டின் வெற்றிக்கு மூல காரணமாக இருப்பது அதன் Labs என்னும் அம்சமாகும். இது ஒரு தனித்தளமாகும். இங்கு புதிய வசதிகள் அனைத்தும் சோதித்துப் பார்க்க நமக்குக் கிடைக்கும். தன் மற்ற பிரிவிற்கான சோதனைச்சாலைப் பிரிவுகளை, கூகுள் மூடிவிட்டது. 

ஆனால், கூகுள் மெயிலுக்கு மட்டும் இந்த Labs வசதி தொடர்ந்து கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்த, வழக்கம் போல ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். பின்னர், வலது மேல் மூலையில் உள்ள சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த பக்கத்தில் கிடைக்கும் Labs லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

உடன் ‘Some crazy experimental stuff’ என்ற பக்கம் கிடைக்கும். இங்கு மின் அஞ்சலுக்குள்ளாகவே, கூகுள் மேப் பயன்படுத்திப் பார்க்கும் சோதனை முன் தோற்றம் பெறலாம். நமக்குத் தேவையான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இன்பாக்ஸ்களை உருவாக்கி சோதனை செய்து பார்க்கலாம். 

டெம்ப்ளேட் ஏற்படுத்தி, அவற்றிலிருந்து மின் அஞ்சல்களை அமைத்துப் பார்க்கலாம். இந்த சோதனை சாலையில் என்ன முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த ஆப்ஷன் முன் உள்ள Enable என்பதனைக் கிளிக் செய்து, இந்த சோதனை முயற்சிகளை மேற்கொள்ளவும்.


3. மெயில் வடிகட்டி ஏற்படுத்த: 

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹு மெயில் பயனாளர்கள், தங்களுக்கு வரும் அஞ்சல் செய்திகளை, வடிகட்டிப் பிரித்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நம் இன்பாக்ஸ், பேஸ்புக் அறிவிப்பு, நியூஸ் லெட்டர் மற்றும் இது போன்ற தேவையற்ற மெயில்களால், மிகப் பெரிதாகக் காட்சி அளிக்காது. இவற்றை எல்லாம், அதன் பொருள் அடிப்படையில், இன்பாக்ஸ்களை அமைத்துப் பிரித்து அமைக்கலாம். 

மெயில்களை வடிகட்ட, பலவகை அடிப்படைகளை அமைக்கலாம். மெயில்களை அனுப்புபவர்களின் பெயர்கள், சப்ஜெக்ட் பீல்டில் உள்ள சொற்கள், செய்தியில் உள்ள சில சொற்கள், செய்திகளுடன் இணைப்பு உள்ளவை மற்றும் இல்லாதவை எனப் பலவகைகளில் மெயில்களை வடி கட்டிப் போல்டர்களாகப் பிரிக்கலாம். 

ஜிமெயிலில் வடி கட்டி அமைக்க, வலது மேல் மூலையில் உள்ள சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து click Filters மற்றும் Create New Filter ஆகியவற்றில் கிளிக் செய்திடவும். 

ஹாட்மெயில் தளத்தில், Options கிளிக் செய்து More Options என்பதனைத் தேர்ந்தெடுத்து, Rules for sorting new messages’ என்பதில் கிளிக் செய்திடவும். இவற்றின் மூலம் மெயில்களைப் பிரித்திடலாம். 

பின்னர் New என்பதில் கிளிக் செய்து பிரிவுகளை அமைக்கவும். யாஹூ மெயில் தளத்தில், Options கிளிக் செய்து, Mail Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இடது பக்கம் உள்ள மெனுவில் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் Add என்பதனைக் கிளிக் செய்து பில்டர்களை அமைக்கவும். 


4. தானாக இன்பாக்ஸ் சுத்தம் செய்திட: 

ஹாட் மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம், வடி கட்டிகளுக்கு மேலாகச் செயல்படும் வகையில், Sweep என்னும் டூலைத் தருகின்றன. இந்த டூல், இன்பாக்ஸை, சுத்தமாகவும், ஓர் ஒழுங்கு முறையோடும் வைத்திருக்க உதவுகிறது. 

குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வந்த ஒரு மெயிலைத் தேர்ந்தெடுத்து, இந்த டூல் மூலம், அவர் அனுப்பியுள்ள அனைத்து மெயில்களையும் அழிக்கலாம். இந்த டூலைப் பயன்படுத்தும் வழிகளை நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். ஸ்வீப் டூலைப் பயன்படுத்த, ஏதேனும் ஒரு இமெயிலை அடுத்துள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 

பின்னர், மேலாக உள்ள டூல் பாரில் கிடைக்கும் ஸ்வீப் பட்டன் அருகே உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், உங்களுக்குத் தேவையான செயல்பாட்டினைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளலாம்.


5. புதிய இமெயில் அக்கவுண்ட்கள் உருவாக்கவும்: 

நாம் அன்றாடம் செல்லும் பல இடங்களில், நம்மைப் பற்றிய தகவல்களைக் கேட்டு வாங்குகின்றனர். இந்த தகவல்களில், மின் அஞ்சல் முகவரியும் ஒன்றாக உள்ளது. இங்கெல்லாம், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மின் அஞ்சல் முகவரியினைத் தருவதைத் தவிர்க்கலாம். 

இதற்கு பெரும்பாலான இமெயில் சர்வர்கள், மாற்று (alias) இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்ள வசதி தருகின்றன. இந்த மாற்று இமெயில் முகவரிகளை, இது போன்ற வர்த்தக மையங்களில் பயன்படுத்தலாம். பின்னர், இது போன்ற அஞ்சல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட போல்டருக்கு, வடி கட்டிகள் மூலம் திருப்பி விடலாம். 

எடுத்துக்காட்டாக, ஹாட் மெயில் தளத்தில், மவுஸ் பாய்ண்ட்டரை, இடது பக்கம் உள்ள இன்பாக்ஸ் தலைப்பின் வலது பக்கம் கொண்டு சென்று, சிறிய சக்கர ஐகான் மீது கிளிக் செய்திடவும். இங்கு Create a Hotmail alias என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தரப்பட்டுள்ள பாக்ஸில், புதிய மின் அஞ்சல் முகவரியினை டைப் செய்திடவும். செய்த பின்னர், ‘Create a Hotmail alias’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

யாஹூ மெயிலில், மேலாக இடது புறம் உள்ள உங்கள் யூசர் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Account Info என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், Manage Your Aliases என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர், Add an Alias என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

ஜிமெயில் தளத்தில், மாற்று யூசர் பெயரை, உடனடியாக, எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். நம் இமெயில் முகவரியில் ஒரு (‘+’) அடையாளத்தை இணைத்து, அதனைத் தொடர்ந்து இன்னொரு சொல்லை இணைத்து, புதிய மாற்று இமெயில் முகவரியை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் ஜிமெயில் முகவரி martin@gmail.com என இருந்தால், அதனை martin+john@gmail.com என அமைக்கலாம். 


6. பாதுகாப்பாக அக்கவுண்ட் செயல்பாடு: 

மற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் மைய கம்ப்யூட்டர் என எதன் மூலமாவது, இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்டுக்குப் பதிலாக, குறியீடுகளைப் பயன்படுத்தலாம். இதற்கு, நீங்கள் உங்கள் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

ஹாட் மெயில் அல்லது அவுட்லுக் டாட் காம் தளங்களில், வழக்கம் போல, உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திடவும். வலது மேல் மூலையில் உள்ள, உங்கள் யூசர் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு Accountஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

அடுத்து ‘Edit security info’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் படிவத்தில், உங்கள் மொபைல் போன் எண் உட்பட, அனைத்து தகவல்களையும் பதிந்திடவும். 

இந்த பாதுகாப்பு நிலையை, அடுத்து வரும் நிகழ்வுகளிலும் பயன்படுத்த, ஹாட் மெயில் லாக் இன் திரையில், ‘Get a single use code to sign in with’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து உங்கள் மொபைல் போனுக்கு லாக் இன் குறியீடு ஒன்று தரப்படும். இது ஒரு டெக்ஸ்ட் மெசேஜாக மொபைல் போனுக்கு வரும். இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஜிமெயில் இதே போன்ற ஒரு சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில், ஜிமெயில் (http://mail.google.com) தளத்திற்குச் செல்லவும். பின் வழக்கம் போல உங்கள் அக்கவுண்ட் லாக் இன் செய்திடவும். உங்கள் இமெயில் முகவரியில் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் Account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

இங்கு இடது பக்கம் காணப்படும் Security என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ‘2step verification’ என்ற தலைப்பில் கிடைக்கும் Edit என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீல நிறத்தில் உள்ள Start Setup என்ற பட்டனில் கிளிக் செய்து, அடுத்தடுத்து கேட்பவற்றைத் தரவும். 

அடுத்து நீங்கள் வேறு ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில் ஜிமெயில் தளத்தை அணுகுகையில், கூகுள் மெயில் தளம், உங்கள் மொபைல் போனுக்கு குறியீடு ஒன்றை அனுப்பும். இதனை உங்கள் பாஸ்வேர்டுடன் இணைத்துத் தர வேண்டும்.