Monday, August 12, 2013

தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை தடையின்றி உலாவ PirateBrowser

மிகப்பிரபலமான ரொறன்ற் இணையத்தளமான piratebay தனது 10வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு PirateBrowser எனும் இணைய உலாவியினை வெளியிட்டுள்ளது.  இந்த உலாவியினை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நாட்டில் ஏதாவது இணையத்தளம் தடைசெய்யப்ப்டிருந்தால், அதனை அணுக முடியும்.
piratebrowser
பிரபலமான திறமூல உலாவியான firefox இனை அடிப்படையாக கொண்ட இந்த உலாவி, அனாமதேயமக உலாவ உதவுகின்ற Tor மற்றும் சில புறொக்சிக்களை உள்ளடக்கியது.
இந்த உலாவியை நீங்கள் தொடங்கும் போது Tor client முதலில் ஆரம்பமாகி பின்னரே உலாவி ஆரம்பமாகும் (Tor இனை பயன்படுத்துபவர்கள் இதனை ஏலவே அறிந்திருப்பர்.)
முக்கிய குறிப்பு: இந்த உலாவி Tor உடன் வந்தாலும், நீங்கள் அனாமதேயமாக உலாவுவதாக கொள்ளவேண்டாம். இது தடைசெய்யப்பட்ட இணையங்களை சாதாரணமாக நீங்கள் இணைய உலாவி ஒன்றின் மூலம் இணையத்தளங்களை உலாவுவது போல உலாவ உதவும்.
தரவிறக்க : http://piratebrowser.com

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான் இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால் பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.
சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்க்கு Google Transliteration IME என்ற மென்பொருள் பயன்படுகிறது இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
1.முதலில் இங்கு சென்று Google Transliteration IME என்ற மென்பொருளை Download செய்யவும். கீழே படத்தில் உள்ளது போல் Tamil என்பதை தெரிவு செய்து I agree to the Google.. என்பதில் மார்க் வைத்து Download செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
tamil
2.இதனை உங்கள் கணினியில் Install செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் Taskbar -இல் EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில் கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு செய்யவும்.
tamil1
3.TA Tamil என்பதை தெரிவு செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் உங்கள் கணினி Desktop-இல் வரும்.
tamil3
4. இப்பொழுது நீங்கள் பேஸ்புக் Skype எங்கு வேண்டுமானாலும் உங்கள் கணினியில் தம்ழில் டைப் செய்யலாம்! நீங்கள் டைப் செய்யும்போது தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.உதரணத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
tamil5
5.நீங்கள் தமிழில் டைப் செய்யும்போது ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டுமானால் CTRL+G கொடுக்கவும். திரும்ப தமிழில் டைப் செய்ய இதே போன்று CTRL+G கொடுத்தால் சரி…

குழந்தைகள் அறிவுப்பூர்வமாக கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்


தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டமான இணையத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. Kidsmart
லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விடயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
2. National Geographic Kids
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விடயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.
3. Busy Bee kids crafts
குழந்தைகளுக்கு கைத்தொழில்கள் செய்யக் கற்று தரும் தளம். (Craft என்றால் கைத்தொழில் என்று கூகுள் தாங்க சொல்லுச்சு.... )
4. Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
5. Nasa Kids
NASA என்றால் என்னவென்று சொல்ல அவசியமில்லை என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கான நாசாவின் தளம்

உங்கள் தகவல்களை பேஸ்புக்கில் மறைக்க

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது.
இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம்.
இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது. பெரும்பாலும் இந்த வழி பலருக்கும் தெரிவதில்லை. அந்த வழிமுறையைக் காணலாம்.
முதலில் உங்கள் அக்கவுண்டில் உள்ள privacy settings க்கு போங்கள்.
பின்பு படத்தில் இருப்பது போல Edit க்கு போகவும்.
தற்போது only me என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
தற்போது படத்தில் உள்ளது போன்று கிளிக் செய்யவும் அதனால் அன்னியர்கள் யாரும் உங்களுக்கு பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப முடியாது.
பின்பு அதில் strict filtering என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இதன் மூலம் அன்னியர்களிடம் இருந்து வரும் புதிய மெசேஜ்கள் தடுக்கப்படும்.
Who Can Look Me Up ல் friends என்று மட்டும் கொடுக்கவும் இதனால் உங்கள் மொபைல் நம்பரை வேறு யாரும் பார்க்க இயலாது.
இதில் கூகுள் போன்ற சர்ச் இன்ஜின்கள் உங்கள் புரோபைலை தேட அனுமதிக்கும் இடம் தான் Let other search engines link to your timeline ஆப்ஷன்.
அடுத்தது டைம்லைன் ஆப்ஷன் privacy க்கு கீழே இந்த ஆப்ஷன் இருக்கும்.
பின்பு அதில் சிகப்பு கோடிட்ட பகுதியை மாற்றி வையுங்கள் இதில் பெரும்பாலும் உங்களது நண்பர் என்ற ஆப்ஷனையே தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் அதில் வேலைகளை முடித்தவுடன் இதில் உள்ளது போன்ற சிவப்பு வட்டம் ஒன்று வரும் இதை நாங்கள் செய்தது எல்லாம் சரியா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஆப்ஸ் க்கு கீழே வாருங்கள் அதில் உங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளுங்கள்.
இதில் பெரும்பாலும் ஆப்ஸ் ஆப்ஷனை ஆப்(OFF) நமக்கு நல்லதாகும் அதனால் அதை ஆப்(OFF) செய்து விடுங்கள்.
அடுத்து Advertise setting இருக்கும் இதிலும் சிறிது எடிட் செய்ய வேண்டும்.
இதில் Third Party Sites ல் No One என்று கொடுக்க வேண்டும் இதன் மூலம் நமது கணக்கு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும்.

தவறிய ஸ்மார்ட் கைப்பேசிகளை இலகுவாக கண்டுபிடிப்பதற்கு

Android Device Manager எனப்படும் இந்த மென்பொருளானது வீட்டிலோ அல்லது அலுவலகங்களிலோ தவறிய ஸ்மார்ட் கைப்பேசியினை உரத்த சத்தத்தில் ஒலி எழுப்பச் செய்கின்றது.
இது Silent -இல் வைக்கப்பட்டுள்ள கைப்பேசியினையும் உரத்த சத்தத்தில் ஒலியெழுப்ப செய்யும்.
அவ்வாறில்லாவிடில் Map வசதியினைப் பயன்படுத்த முடியும்.
சில சந்தர்ப்பங்களில் செல்பேசியினைக் கண்டுபிடிக்க முடியவில்லையாயின் இந்த மென்பொருளினைப் பயன்படுத்தி செல்பேசியில் உள்ள அனைத்து முக்கியமான தரவுகளையும் அழித்துவிட முடியும்.
இது Android 2.2 இயங்குதளம் மற்றும் அதற்கு பிந்திய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் இதனை பயன்படுத்துவதற்கு கூகுள் கணக்கு அவசியமானதாக இருக்கின்றது.

மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்


கல்வியை ஆக்கிரமித்து வரும் கணனித்துறை காரணமாக ஒவ்வொரு கல்வித்துறை சார்ந்தும் காலத்திற்கு காலம் பல்வேறு மென்பொருட்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் வரிசையில் Essential Anatomy எனும் புத்தம் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
விஞ்ஞானத்துறையில் அதிக ஈடுபாடு உடைய மாணவர்களுக்கு இம்மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
அதாவது மனித உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் முப்பரிமாண முறையில் துல்லியமாகவும், விபரமாகவும் அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படுகின்றது.
மேலும் இது Mac OS கணினிகளிலும் iPad, iPhone சாதனங்களிலும் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sunday, August 11, 2013

போட்டோக்களைக் காப்பாற்ற புதிய தளம்


மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இந்நாட்களில், நாம் அதிகமான எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கிறோம். 

இதனால், ஹார்ட் டிஸ்க் இடம் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஹார்ட் டிஸ்க் திடீரென இயங்காமல் போனால், இந்த போட்டோக்கள் கிடைக்காது. 

இதற்கான ஒரு தீர்வாக, பல இணைய தளங்கள், க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்திட டிஸ்க் இடம் தருகின்றன. அந்த வகையில் அண்மையில் பார்த்த ஓர் இணைய தளம் picturelife. இதன் முகவரிhttps://picturelife.com/ இந்த தளத்தில் நம் போட்டோக்களைப் பத்திரமாக பதிந்து வைக்கலாம்.

இந்த தளத்தில் நுழைந்து, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் மின் அஞ்சல் முகவரியினையும், அதற்கான பாஸ்வேர்டையும் கொடுத்து அக்கவுண்ட் தொடங்கவும். அடுத்து Continue மற்றும் Next Step பட்டன்களைக் கிளிக் செய்திடவும். 

உடனே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்களை பேக் அப் செய்திடும் வேலைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். Start Backing Up Your Photographs என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், ஒரு செட் அப் பைல் டவுண்லோட் ஆகும். இதனை இயக்கி, படங்களை ஒருங்கிணைக்கும் Picturelife Sync அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். 

இது செயல்படத் தொடங்கியவுடன், உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்து, நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை, உறுதி செய்வதற்காகக் கொடுத்து, எந்த பதிப்பினை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். 

இந்த தளம் இலவசமாக 5 ஜிபி வரையிலான பைல் சேவ் செய்திட இடம் தருகிறது. இந்த இடத்தைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 2,000 போட்டோக்களை சேவ் செய்து வைத்திடலாம். 

எந்த பதிப்பு எனத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் போட்டோக்கள் மற்றும் படங்கள் உள்ள போல்டரைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பிக்சர் லைப் தளத்தில் சேவ் செய்யப்படும். 

அனைத்தும் முடிந்த பின்னரும், நீங்கள் பிக்சர் லைப் தளம் சென்று, உங்கள் போட்டோக்களை ஆல்பங்களாகப் பிரிக்கலாம். நீங்களாகவே, போட்டோக்களை இதன் பின்னர் அப்லோட் செய்திடலாம். 

இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்த தளம் தனியே இதற்கென சப்போர்ட் பக்கம் ஒன்றை இயக்குகிறது. 

பல நூறு, ஏன் ஆயிரக்கணக்கான நம் போட்டோக்களைப் பத்திரமாகப் பதிந்து வைத்து, நம் வாழ்நாளின் பிற்காலத்திலும், நம் சந்ததியினரும் பார்த்து ரசிப்பது, வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். எனவே, இதுவரை இது போன்ற தளம் எதனையும் பயன்படுத்தாதவர்களும், பிறவற்றைப் பயன்படுத்தி வருபவர்களும் இதனைப் பார்க்கலாம்.

இலவச Elementary இயங்குதளம் பதிப்பு 2.0 வெளியானது

உபுந்து லினக்ஸ் இனை அடிப்படையாக கொண்ட Elementary  இயங்குதளத்தின் பதிப்பு இரண்டு Luna வெளியாகி உள்ளது. லினிக்ஸ் இயங்குதளங்களில் அழகானது என பலரும் கருதுகின்ற இது, முற்றிலும் இலவசமானதும், திறமூல நிரலை உடையதுமாகும்.
மிகப்பாதுகாப்பான இந்த இயங்குதளம் ஏராளமான மென்பொருள்களை தரவிறக்கி நிறுவக்கூடிய வகையில் ஒரு appstore இனை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இதுவரை காலமும் லினிக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தாதவராயின், Elementary 2.0 உங்களுக்கு சரியான ஒரு தொடக்கமாக இருக்கும்.
தரவிறக்க : http://elementaryos.org
elementary

Monday, August 5, 2013

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி


முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.
இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூ டியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதி தரப்பட்டிருக்கும்.
இதே போன்று பேஸ்புக் வோல்களில் பகிரப்படும் போஸ்ட்களினையும் இவ்வசதி மூலம் ஏனைய தளங்களில் நேரடியாக பயன்படுத்த முடியும்.
இதனால் குறித்த போஸ்ட்களுடன் தொடர்பான புகைப்படங்களை தரவிறக்கம் செய்து மீண்டும் தரவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.