Wednesday, November 13, 2013

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.

ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).

OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது

1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.

2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.

4. 200% தொடக்க வேகம்.

5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.

6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.

தரவிறக்க  சுட்டி 

சேதமடைந்த கோப்புகளை மீட்டெடுக்க

சில முக்கியமான கோப்புகளை மிகவும் கவனமாக பாதுகாப்போடு வைத்திருப்போம். சில நேரங்களில் அந்த கோப்புகள் பழுதடைந்து விடும். அவ்வாறு பழுதடைந்த கோப்புகளை மீட்டெடுப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அலுவல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போர்ட்டபிள் டிவைஸ் பெண்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வோம். இவ்வாறு கோப்புகளை இடமாற்றம் செய்யும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சேதமடையும் கோப்புகளை மீட்டெடுக்க File Repair என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்கம் சுட்டி 


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் எந்த கோப்பினை மீட்டெடுக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் Start Repair என்னும் பொத்தானை அழுத்தி இழந்த கோப்பினை மீண்டும் பெற முடியும். இந்த மென்பொருளின் மூலமாக சேதமடைந்த பல்வேறு பைல் பார்மெட்டுடைய கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.


    corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
    corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
    corrupted Zip or RAR archives (.zip, .rar)
    corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
    corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg,      .jpeg, .gif, .tiff, .bmp, .png)
    corrupted PDF documents (.pdf)
    corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
    corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
    corrupted music (.mp3, .wav) 



மேலே குறிப்பிட்ட பைல் பார்மெட்டுடைய சேதமடைந்த பைல்களை மீட்டெடுத்து கொள்ள முடியும். 

வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு


வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இருக்கும். இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படுத்துதல் ஆகும்.

தற்போது இந்த வசதியை தரும் Video Snapshot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இம்மென்பொருளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடியோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது.

மேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

அழகான இயற்கையின் ஒலியை கேட்க ஒரு இணையதளம்

இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு  எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்  இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.findsounds.com/types.html


மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?



இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன்

  • முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...

PDF கோப்புக்களுக்கு Watermark வைக்க

சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும்.

இவ்வாறு உருவாக்கப்படும் PDF  கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் எழுத்துக்களைக் கொண்டோ அல்லது லோகோவைப் பயன்படுத்தியோ வாட்டர்மார்க்கினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.


Gmail வழங்கும் மற்றுமொரு புதிய வசதி

முதற்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் Gmail ஆனது தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது மின்னஞ்சல்களில் இணைக்கப்படும் கோப்புக்களை கணனியில் தரவிறக்கம் செய்துகொள்ளும் அதேவேளை, நேரடியாகவே கூகுள் ட்ரைவினுள் சேமிக்கும் வசதியையும் தற்போது வழங்குகின்றது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம் புகைப்படங்கள், வீடியோக்கள், எக்ஸெல் கோப்புக்கள் மற்றும் PDF கோப்புக்களை இவ்வாறு கூகுள் ட்ரைவினுள் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

நமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவாக்குவது எப்படி ?

பல இடங்களில் நீங்கள் பாத்திருப்பிர்கள் இதனை எப்படி நம்முடைய இணையத்தளத்துக்கோ அல்லது  பேஸ்புக் கணக்குக்கோ உருவாக்கலாம்

 QR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

QR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது.

நம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் கூப்பன்களுக்கு எளிதாக QR கோடினை உருவாக்க முடியும். இதனை இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே உருவாக்க முடியும். 
இதை  உருவாக்க கூடிய  இணையத்தளங்கள் கீழே ...

இணையத்தளங்கள்