Wednesday, April 3, 2013

2012 - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் -கணனி


இதுவரையிலும் இல்லாத அளவு, 2012ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பாரிய அளவில் வளர்ச்சியை கண்டது என்று சொன்னால் அது மிகையல்ல.
கணனி, கைபேசிகள், டேப்லட்கள், மடிக்கணனிகள் என அனைத்துமே மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் புது புதிதான வசதிகளுடன் அறிமுகமாகி கொண்டு தான் இருந்தன. குறிப்பாக இந்த ஆண்டில் மருத்துவம், ஆராய்ச்சி, விஞ்ஞானம் என அனைத்திலுமே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.
இன்றைய நவீன உலகில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் கணனிகள், டேப்லட்கள் அறிமுகமாகின. ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு, தங்களது பயனாளர்களுக்கு ஏற்றவகையில் புதிது புதிதாக வசதிகளை அறிமுகப்படுத்தின.
மிக முக்கியமாக 2012-ல் கண்ணாடி இல்லாமல் முதன் முறையாக மடிக்கணனி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த கணனி விஞ்ஞானிகள் மனித ரோமத்தை விடவும், பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டனர்.
இவ்வாறான கம்பிகள் குவாண்டம் கணனிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளை கணனிகளை உருவாக்குவதற்கு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலும் மிக முக்கியமாக ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயற்படும் குளிர்சாதன பெட்களை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் தீவிரமாக ஆர்வம்காட்டின.
ஆண்ட்ராய்ட் குளிர்சாதனப்பெட்டிகள் விரைவில் அறிமுகம்

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு விதமான ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் கணணிகள் அறிமுகமாகி மக்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது இந்த இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வீட்டு உபயோக சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து கூகுள் நிறுவன செயற்குழு தலைவர் எரிக் ஷ்மிட் கூறுகையில், கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்த ஏதுவாக ஓபன் சோர்சில் விடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக சில நிறுவனங்கள் குளிர்சாதனப்பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள் நிறைவடைந்து விட்டது, விரைவில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
கண்ணாடி இல்லாமல் அறிமுகமான உலகின் புதிய மடிக்கணணி
உலகிலேயே முதல் க்ளாஸ் ப்ரீ 3டி டிஸ்ப்ளே கொண்ட சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் பிரியர்களுக்கு இந்த 3டி டிஸ்ப்ளே இன்னும் உற்சாகத்தைக் கொடுக்கும்.
இந்த விக்கிபேடின் 8 இன்ச் திரை ஒரு விளையாட்டு மைதானம் போன்ற அனுபவத்தை கொடுக்கும். இது ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தைக் கொண்டிருப்பதால் புதிய தலைமுறை விளையாட்டுகளையும் இதில் தடையில்லாமல் விளையாடலாம்.
விக்கிபேட்டின் நினைவகம் 8GBயைக் கொண்டிருக்கிறது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டிருப்பதால் இதன் மூலம் நினைவகத்தை 64 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
வீடியோ கேமை சிறப்பாக விளையாட 4 பட்டன்களை இது கொண்டிருக்கிறது. இதனை எளிதாக தொலைக்காட்சி மற்றும் கணணி திரையில் இணைத்து பெரிய திரையில் வீடியோ கேமை விளையாடலாம்.
இந்த விக்கிபேடின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் வரும் முன்பே மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த தலைமுறை கணணிக்காக கண்டுபிடிக்கப்பட்ட மனித ரோமத்தை விட மெலிதான மின் கம்பிகள்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கணணி விஞ்ஞானிகள் மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.
கணணிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்ற போதிலும் அவற்றின் செயல் திறன் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கணணியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன.
அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணணி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது.
அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு அணுக்கள் மட்டுமே அகலமும் ஒரு அணு மட்டுமே உயரமும் கொண்ட நுண்ணிய மின் கம்பிகளை இவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இவை சிலிகான் அணுக்களுடன் பாஸ்பரஸ் அணுக்களை கலந்து இந்த நுண்கம்பி உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும்போது, கம்பியின் மின் கடத்தும் மையப்பகுதி பாதுகாக்கப்படும் அதே நேரம் கடத்தப்படும் மின்சாரம் அதிகம் விரயமும் ஆவதில்லை.
குவாண்டம் கணணிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளைக் கணணிகளை உருவாக்குவதற்கு இந்த நுண்கம்பிகள் மிக அவசியமாகத் தேவைப்படும்.
சீனாவில் முதல் சூப்பர் கணணி அறிமுகம்

சீனாவில் முதல் சூப்பர் கணணியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சீனாவின் கணணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணணி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான தீர்வுகளை ஒரே நொடியில் கண்டறியும் வல்லமை கொண்டது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கணணி, 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் பயன்பாடு, உயிர் மருந்தகம், தொழில்துறை வடிவமைப்பு, நிதி ஆகிய துறைகளில் இந்த சூப்பர் கணணியை பயன்படுத்த முடியும்.



No comments:

Post a Comment