Monday, August 12, 2013

தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை தடையின்றி உலாவ PirateBrowser

மிகப்பிரபலமான ரொறன்ற் இணையத்தளமான piratebay தனது 10வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு PirateBrowser எனும் இணைய உலாவியினை வெளியிட்டுள்ளது.  இந்த உலாவியினை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நாட்டில் ஏதாவது இணையத்தளம் தடைசெய்யப்ப்டிருந்தால், அதனை அணுக முடியும்.
piratebrowser
பிரபலமான திறமூல உலாவியான firefox இனை அடிப்படையாக கொண்ட இந்த உலாவி, அனாமதேயமக உலாவ உதவுகின்ற Tor மற்றும் சில புறொக்சிக்களை உள்ளடக்கியது.
இந்த உலாவியை நீங்கள் தொடங்கும் போது Tor client முதலில் ஆரம்பமாகி பின்னரே உலாவி ஆரம்பமாகும் (Tor இனை பயன்படுத்துபவர்கள் இதனை ஏலவே அறிந்திருப்பர்.)
முக்கிய குறிப்பு: இந்த உலாவி Tor உடன் வந்தாலும், நீங்கள் அனாமதேயமாக உலாவுவதாக கொள்ளவேண்டாம். இது தடைசெய்யப்பட்ட இணையங்களை சாதாரணமாக நீங்கள் இணைய உலாவி ஒன்றின் மூலம் இணையத்தளங்களை உலாவுவது போல உலாவ உதவும்.
தரவிறக்க : http://piratebrowser.com

No comments:

Post a Comment